மூன்று லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பொதியுடன் சீனப் பெண் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் பொதியை சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்றபோது அப்பெண் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அப்பெண், சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் 44 வயதான அழகுக்கலை நிபுணர் ஆவார்.
அவர் சீனாவிலிருந்து சிகரெட் பொதியை வாங்கி, மலேசியாவின் கோலாலம்பூருக்கு வந்துள்ளார்.
அங்கிருந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH-179 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அவரது பயணப் பைகளில், சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான 20,400 சிகரெட்டுகள் அடங்கிய 102 சிகரெட் அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
மேற்கொண்டு விசாரணைக்காக, அந்த சீனப் பெண்ணும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளும் இன்று (03) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.















