எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நிகழ்வில் தனது அடுத்தகட்ட முதன்மைத் தயாரிப்பு வரிசையை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘ஐபோன் 18 ப்ரோ’ (iPhone 18 Pro) அறிமுக நிகழ்வுக்கான திகதியை இந்நிறுவனம் இந்த வாரமே அறிவிக்கக்கூடும்.
ஆப்பிள் தனது அண்மைய நடைமுறையைப் பின்பற்றினால், இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 27 அன்று வெளியாகலாம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று ஆப்பிள் நிறுவனம் iPhone 17 தொடருக்கான நிகழ்வுத் திகதியை அறிவித்தது.
அதே திகதியில்தான் iPhone 16 அறிமுக நிகழ்வும் அறிவிக்கப்பட்டிருந்தது.
நிறுவனம் அதே கால அட்டவணையைப் பின்பற்றினால், iPhone 18 Pro நிகழ்வு குறித்த அறிவிப்பு இந்த வியாழக்கிழமை வெளியாகக்கூடும்.
இதனிடையே, இந்த அறிமுக நிகழ்வு செப்டம்பர் 9 ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு வெளியீடு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கக்கூடும், ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் வரிசையின் இரு முனைகளிலும் இரண்டு பெரிய மாற்றங்களைச் செய்யத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
ஐபோன் 18 ப்ரோ மெக்ஸில், இதுவரை எந்த ஐபோனிலும் வழங்கப்படாத ஒரு முக்கிய கேமரா அம்சம் இடம்பெறக்கூடும்.
அதே நேரத்தில், ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோனின் விலை சுமார் 2000 டொலர்களாக இருக்கும் என்று வதந்திகள் பரவி வருகின்றன.
ஆனால், ஐபோனின் முக்கிய அங்கமாக இருந்து வந்த டெலிஃபோட்டோ கேமரா மற்றும் ஃபேஸ் ஐடி ஆகிய இரண்டு முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















