இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான அசித ஃபெர்னாண்டோவுக்கும் தலா 25 சதவீத போட்டி ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் போது இருவருக்கு இடையிலும் களத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் இந்த மோதல் காரணாக இரு வீரர்களுக்கும் ஒரு குறைமதிப்பு புள்ளியும் (demerit point) வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேசப் போட்டியின்போது சக வீரர், ஆதரவுக் குழுவினர், நடுவர், போட்டி நடுவர் அல்லது பார்வையாளர் உள்ளிட்ட வேறு எவருடனும் முறையற்ற வகையில் உடல்ரீதியான தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பான, வீரர்கள் மற்றும் வீரர்களுக்கான ஆதரவுக் குழுவினருக்கான நடத்தை விதிகளின் பிரிவு 2.12-ஐ இவ்விரு வீரர்களும் மீறியுள்ளதாக ஐசிசி (ICC) தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இந்தியாவின் முதல் இன்னிங்ஸின் 17 ஆவது ஓவரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.














