• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்கரவின் குற்றப் பின்னணி குறித்து பொலிஸ் விசேட அறிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

துபாயில் கைது செய்யப்பட்டு இன்று (25) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கண்ணங்கராவுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஹன்வெல்ல, நெலுவத்துவ, பாதுக்க, கொஸ்கம, கொள்ளுப்பிட்டி மற்றும் மீகொட ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு கொலைகள், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், கப்பம் கோரி அச்சுறுத்தியமை மற்றும் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் சந்தேகநபருக்கு நேரடித் தொடர்பிருப்பது பொலிஸ் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2013 ஆம் ஆண்டு ஹன்வெல்ல பகுதியில் நபர் ஒருவர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதுடன் இவருடைய குற்றப் பின்னணி ஆரம்பமாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தொழிலதிபர் ஒருவரிடம் கப்பம் கோரி அவரது வாகனத்திற்குத் தீ வைத்தமை, வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை, 2022 ஆம் ஆண்டு ஹன்வெல்ல பகுதியில் நபரொருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய உடந்தையாக இருந்தமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமை (இதற்கான வழக்கு அவிசாவளை நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது) ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை.

மேலும், 2023 ஆம் ஆண்டு பாதுக்க பகுதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, 2024 ஆம் ஆண்டு ஹன்வெல்ல மற்றும் நெலுவத்துவ பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிக் சூட்டுக் கொலைகள், 2025 ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி கிளப் ஒன்றிற்கு அருகில் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் ஆயுதங்களை விநியோகித்தமை, மற்றும் மீகொட பகுதியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை உள்ளிட்ட தொடர் கொடூரச் சம்பவங்களை இவரே பின்னணியில் இருந்து இயக்கியுள்ளதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள லலித் கண்ணங்கரவிடம் போதைப்பொருள் கடத்தல், பாதாள உலகக் குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: buslalithsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

Next Post

சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!

Related Posts

உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!
இலங்கை

உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

2026-10-09
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !
இலங்கை

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

2026-10-09
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!
இலங்கை

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

2026-10-09
ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பில் புதிய தகவல்!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பில் புதிய தகவல்!

2026-10-09
ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!
இலங்கை

ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!

2026-10-09
களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!
இலங்கை

களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!

2026-10-09
Next Post
சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு   ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!

சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!

ஜெய்ஸ்வால் – அசித மோதல்: ஐசிசி அபராதம்!

ஜெய்ஸ்வால் - அசித மோதல்: ஐசிசி அபராதம்!

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

0
AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

0
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

0
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

0
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

0
உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

2026-10-09
AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

2026-10-09
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

2026-10-09
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

2026-10-09
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

2026-10-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: