சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள 120,000 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கல்கிஸ்ஸை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண், மொரட்டுவ, கொரலவெல்ல, பெரேரா மாவத்த பகுதியில் வசிக்கும் 31 வயதுடையவர் ஆவார்.
கல்கிஸ்ஸ பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், இரத்மலான கடற்கரையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண், கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
















