இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க, ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவுக்கான உலக தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற லொசான் டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இதன்படி, ருமேஷ் தரங்க தற்போது 1,363 புள்ளிகளுடன் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
ஜேர்மனியின் ஜூலியன் வெபர் 1,342 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அதேநேரம், கிரெனடாவைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் மூன்றாம் இடத்திலும், டைமண்ட் லீக் போட்டியில் தரங்காவுக்குக் கடும் சவால் அளித்த இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 1,301 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளார்.
இந்நிலையில், ருமேஷ் தரங்காவின் அடுத்த இலக்கு 2026 சூரிக் டயமண்ட் லீக் தடகளப் போட்டியாகும்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (26) இரவு ஆரம்பமாகி, வெள்ளிக்கிழமை (27) அதிகாலை வரை நடைபெறவுள்ளது.














