கேகாலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் (29) இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துதல் தொடர்பான தற்போதைய சட்ட விதிகளின் கீழ் சந்தேக நபர் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகிறது.















