எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற விவரம் அறியப்படாத வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபரொருவரைத் தனமல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனமல்வில, ககேயாய பகுதியில் நேற்று (29) பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே 35 வயதுடைய அப்பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து குறித்த துப்பாக்கியுடன், 5,370 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னரும் கொலை மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளிவந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் இந்தத் துப்பாக்கியை என்ன நோக்கத்திற்காக வைத்திருந்தார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சந்தேகநபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்துத் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















