• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/22
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜப்பானின், நிஷினில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பூங்காவில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களை கடந்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற மைல்கல்லை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) எட்டினார்.

அந்த மைல்கல்லை எட்ட வெறும் 13 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் மந்தனா இன்றைய இறுதிப் போட்டிக்கு வந்தார். 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்திலும் சேர்த்து அவர் மொத்தம் 10,987 ஓட்டங்களை இப் போட்டிக்கு முன்னதாக குவித்திருந்தார்.

இதில் டெஸ்ட் போட்டிகளில் 788 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 5,411 ஓட்டங்களும், டி20 போட்டிகளில் 4,788 ஓட்டங்களும் அடங்கும். 

இன்றைய போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த பின்னர், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்ட அவர் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை.

இந்திய அணியின் துணைத் தலைவர், ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை அடித்துத் தனது இன்னிங்ஸைத் தொடங்கினார்.

பின்னர் மூன்றாவது ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசி, சர்வதேச அளவில் 11,000 ஓட்டங்களை கடந்த மைல்கல்லை எட்டினார். 

இந்தச் சாதனை, தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வரும் அந்த இடது கை ஆட்டக்காரரின் சிறப்பான பயணத்தில் மற்றொரு முக்கிய அத்தியாயமாக அமைந்தது.

மகளிர் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற சாதனையை, இந்திய அணியின் முன்னாள் தலைவர் மிதாலி ராஜிடமிருந்து மந்தனா அண்மையில்தான் தன்வசப்படுத்தினார். 

இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் ஹொங்கொங் அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடி 124 ஓட்டங்களை குவித்ததன் மூலம், மிதாலி ராஜின் 10,868 ஓட்டங்கள் என்ற சாதனையை அவர் முறியடித்தார்.

அப்போது அவரது மொத்த ஓட்டங்களின் எண்ணிக்கை 10,880-ஆக உயர்ந்தது.

30 வயதான இவர், கிரிக்கெட்டின் மிகக் குறுகிய வடிவத்திலும் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகிறார். 

பங்களாதேஷிக்கு எதிரான ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அரையிறுதியில், நியூசிலாந்தின் நட்சத்திர வீராங்கனை சூசி பேட்ஸைப் பின்னுக்குத் தள்ளி, மகளிர் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனையாக மந்தனா உருவெடுத்தார்.

இன்றைய போட்டியில் மந்தனா 45 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 79 ஓட்டங்களை குவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Smriti Mandhanaஸ்மிருதி மந்தனா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

Next Post

பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

Related Posts

பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!
இலங்கை

பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

2026-09-22
புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21; ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு!
இலங்கை

ஊழல் தடுப்புத் திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

2026-09-22
நியூயோர்க் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!
அமொிக்கா

நியூயோர்க் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

2026-09-22
தங்கத்திற்கான இறுதிச் சமர்; இந்தியா, இலங்கை இன்று மோதல்!
ஆசிரியர் தெரிவு

தங்கத்திற்கான இறுதிச் சமர்; இந்தியா, இலங்கை இன்று மோதல்!

2026-09-22
கிரீன்லாந்தில் புதிய இராணுவத் தளங்களை திறக்கவுள்ள அமெரிக்கா!
அமொிக்கா

கிரீன்லாந்தில் புதிய இராணுவத் தளங்களை திறக்கவுள்ள அமெரிக்கா!

2026-09-22
திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!
இலங்கை

திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!

2026-09-21
Next Post
பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

0
சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

0
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

0
புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21; ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு!

ஊழல் தடுப்புத் திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

0
நியூயோர்க் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

நியூயோர்க் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

0
பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

2026-09-22
சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

2026-09-22
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21; ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு!

ஊழல் தடுப்புத் திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

2026-09-22
நியூயோர்க் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

நியூயோர்க் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

2026-09-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: