இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த மற்றும் புதுமையான பல படங்களை இயக்கியதற்காகப் புகழ்பெற்ற மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ், நேற்றிரவு (03) சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 94.
‘புஷ்பக விமானம்’ மற்றும் காலப் பயணம் சார்ந்த பிரம்மாண்டமான திரைப்படமான ‘ஆதித்யா 369’ போன்ற படங்களுக்காக இவர் அறியப்பட்டவர்.
உடல்நலக்குறைவு காரணமாகக் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிங்கீதம் சீனிவாச ராவ் அங்கு காலமானார்.
அவர் வயது முதிர்வு தொடர்பான பாதிப்புகளுக்குச் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆறு தசாப்தங்கள் மற்றும் ஐந்து மொழிகளில் நீடித்த தனது திரைப்பயணத்தில், சிங்கிதம் சீனிவாச ராவ் வழக்கத்திற்கு மாறான கருத்துக்கள், கதை சொல்லும் நுட்பங்கள் மற்றும் வகைகளைப் பரிசோதித்து இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.
இத்தகவலை அக்குடும்பத்தினர் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினர்.
திரைப்படத் தயாரிப்பாளரான சிங்கீதம் சீனிவாச ராவ்பேரன் அஸ்வின், அவரது உடல் தகனம் இன்று மாலை 4:30 மணிக்குச் சென்னையில் உள்ள ஏவிஎம் (AVM) மின்மயானத்தில் நடைபெறும் என்று தெரிவித்தார்.
















