பிரித்தானியாவில் அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் விமானப்படைத் தளம் அருகே, வெடிபொருட்களுடன் மூன்று வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில், பொதுமக்கள் வழங்கிய அவசரத் தகவலையடுத்து அங்கு சென்ற ஆயுதம் ஏந்திய பொலிஸார் ஐவரையும் கைது செய்தனர்.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள வெல்ஃபோர்ட் (Whelford) கிராமத்தைச் சேர்ந்த 85 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதுடன், இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் பிரிவினரும் சோதனைகளில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், இதுவரை வெளிநாட்டுத் தொடர்புகள் எவையும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. கைது செய்யப்பட்ட ஐவரும் பயங்கரவாதச் செயலைத் தயாரித்ததாகச் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
















