ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இலங்கை வீரர்கள் தங்கப் பதக்கத்தையும் புதிய சாதனையையும் பதித்து பெருமை சேர்த்துள்ளனர்.
ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியின் T46 பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் பிரதீப் சோமசிறி, இன்று தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பான திறமையை வெளிப்படுத்திய அவர், ஏனைய ஆசிய நாடுகளின் வீரர்களைப் பின் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார்.
இப்போட்டியில் இந்திய வீரர் இரண்டாம் இடத்தையும், பிலிப்பைன்ஸ் வீரர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இதேவேளை, பெண்களுக்கான நீளம் பாய்தல் T47 பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் ஜனனி தனஞ்சனா விக்ரமசிங்க, 5.52 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
















