அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தல்லாஹஸ்சி (Tallahassee) நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் கால்பந்து அரங்கம் அருகே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 6 சிறுவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணையின்படி, துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு முன்பு தனிநபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஏ&எம் பல்கலைக்கழகத்தின் (Florida A&M University) பிராக் மெமோரியல் கால்பந்து மைதானத்திற்கு அருகில் இரவு நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கால்பந்து போட்டிக்குப் பிறகு அந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோது எதிர்பாராதவிதமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
கூட்ட நெரிசல் காரணமாகக் பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்தவர்களைத் தங்கள் கைகளில் தூக்கிச் சென்று முதலுதவி அளித்தனர்.

















