பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையின்றிப் பயணிப்பதும் தொடர்பில் நேர்மையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் அன்டி பே(ர்)னாம் (Andy Burnham) தெரிவித்துள்ளார்.
சண்டே டைம்ஸ் (Sunday Times) பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா சிறந்த உறவை ஏற்படுத்த வேண்டும் எனத் தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைதல் போன்ற வாய்ப்புகளையும் பரிசீலிக்கலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய ஏற்பாடுகளுக்கு, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையில் தடையின்றிப் பயணம் மேற்கொண்டு வசிக்கும் உரிமை அவசியமாகலாம்
என சுட்டிக்காட்டிய அவர் இந்த விவகாரம் குறித்து உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், கன்சர்வேட்டிவ் கட்சியின் நிழல் உள்துறைச் செயலாளர் கிறிஸ் பில்ப் (Chris Philp), 2016ஆம் ஆண்டு பிரெக்ஸிட் (Brexit) வாக்கெடுப்புக்குப் பின்னர், இத்தகைய உரிமையை மீண்டும் கொண்டுவர முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் அன்டி பே(ர்)னாமின் (Andy Burnham) கருத்துகள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம் என சீர்திருத்தக் கட்சியின் தலைவர் நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) விமர்சித்துள்ளார்















