பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவற்றில் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, பெல்மதுல்ல, குருவிட்ட, எலபட மற்றும் ஓபநாயக்க ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் மரங்கள் முறிந்து வீழுதல் தொடர்பில் அவதானத்துடன் செயறப்டுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இரத்தினபுரி, அயகம, பெல்மதுல்ல, குருவிட்ட, எலபத்த மற்றும் ஓபநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், நிலச்சரிவு குறித்த மூன்றாம் நிலை (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது, நாளை (27) பிற்பகல் 2:45 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

















