சீரற்ற காலநிலை காரணமாக நாளை (27) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
முன்பள்ளிச் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து முன்பள்ளிகளினதும் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் அறிவுறுத்தியுள்ளது.















