பேயர்ன் மியூனிக் (Bayern Munich) மற்றும் இங்கிலாந்து அணியின் முன்கள வீரரான ஹரி கேன் (Harry Kane ), கால்பந்து விளையாட்டின் மிக உயரிய தனிநபர் விருதான ‘பாலன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வென்றுள்ளார்.
சாதனை படைத்த ஒரு பருவத்திற்குப் பிறகு அவர் இந்த விருதை வென்றதன் மூலம், கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த கோல் அடித்த வீரர்களில் ஒருவராகத் தனது இடத்தைப் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஹரி கேன், லாமின் யமால், கைலியன் எம்பாப்பே மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி இந்த மதிப்புமிக்க விருதைக் கைப்பற்றினார்.
2001 ஆம் ஆண்டில் மைக்கேல் ஓவன் இந்த உயரிய விருதை வென்ற பின்னர், கடந்த 25 ஆண்டுகளில் இந்த விருதை வெல்லும் முதல் ஆங்கிலேயர் ஹரி கேன் ஆவார்.
கடந்த பருவத்தில் கழகம் மற்றும் தேசிய அணிக்காக விளையாடிய 65 போட்டிகளில் 73 கோல்களை அடித்து அசத்திய அவர், ஸ்டான்லி மேத்யூஸ், டெனிஸ் லா, பாபி சார்ல்டன், கெவின் கீகன் மற்றும் மைக்கேல் ஓவன் ஆகியோருடன் இணைந்து, இந்த விருதை வென்ற பிரித்தானியர்களில் ஒருவராக இடம்பிடித்தார்.

அதேநேரம், ஸ்பெயின் நாட்டு நடுக்கள வீராங்கனை அலெக்ஸியா புட்டெல்லாஸ் (Alexia Putellas), மூன்றாவது முறையாக ‘பாலன் டி ஓர் ஃபெமினின்’ (Ballon d’Or Feminin) விருதை வென்றார்.













