நாட்டில் ஜனநாயகத்துக்கான வெளியை சுருக்கும், மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும், பேசுவதற்கான சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம் என்பவற்றை கட்டுப்படுத்தும் 2 புதிய சட்டங்களைக் கொண்டுவர இந்த அரசாங்கம் தயாராகி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரிய தேர்தல் தொகுதி, அம்பகஸ்வெவ விகாரையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 100 சீமெந்து பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று (31) கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின்
அங்கத்தவர் விரிவாக்க வேலைத்திட்டத்தில் பங்கேற்பதற்காக பொலன்னறுவை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் நிலையிலையே எதிர்க்கட்சித் தலைவர் இந்த புண்ணிய நிகழ்விலும் பங்கேற்றார்.
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டம் ஆகிய இந்த இரண்டு சட்டங்களின் ஊடாக மக்களை கட்டுப்படுத்த இந்த அரசாங்கம் முற்பட்டு வருகின்றது. பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்க வேண்டும் போலவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களையும் தடுக்க வேண்டும். என்றாலும், இந்தத் தலைப்புக்களின் கீழ் அரசாங்கம் மக்களின் சுதந்திரத்திற்குச் கட்டுப்பாடுகளை விதித்து, தடுப்புக் காவற் கட்டளைகளைப் பிறப்பிப்பதில் பாரிய அதிகாரங்கள் நிறைவேற்று அதிகாரத்திடம் வழங்கியுள்ளது.
பயங்கரவாதம் என்றால் என்னவென்பதற்கு வரைவிலக்கணம் கூறுவது கூட விரிவான பரப்பாக காணப்படுகின்றன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டத்தின் கீழ் சிகையலங்காரம், ஆடைகள் மற்றும் பச்சைக்குத்துதல் (Tattoo) என்பனவும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக வியாக்கியானம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளும் இதில் காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.















