• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆளும் தரப்பில் உள்ளவர்களால் ஒரு செங்கல் கல் கூட கண்டி மாவட்ட அபிவிருத்திக்காக வைக்க முடியவில்லை – வேலு குமார்

shagan by shagan
2021/03/30
in இலங்கை
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

“தேர்தல் காலத்தில் நாமே ஆளும் தரப்பில் உள்ளோம், எம்மால் தான் மக்களுக்கு பணியாற்ற முடியும் என்றார்கள். ஆனால், இரண்டு வருடங்கள் கடந்தும், ஒரு செங்கல் கல் கூட கண்டி மாவட்ட அபிவிருத்திக்காக வைக்கப்படவில்லை.” என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலு குமார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பஹத்த ஹேவாஹெட காரியாலய திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“கண்டி மாவட்டத்திற்கு பல வருடங்களுக்கு பின் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்தது. அதனை மிக சிறந்த முறையில் கடந்த ஆட்சியில் நாம் பயன்படுத்தினோம். கண்டி மாவட்டத்தில் பல ஆண்டுகள் தேங்கி கிடந்த உரிமை சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்தோம். அதே போன்று, புறக்கணிக்கப்பட்டிருந்த தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியில் எழுச்சியை ஏற்படுத்தினோம்.

கடந்த தேர்தல் காலத்தில் நாமே ஆளும் தரப்பில் உள்ளோம், எம்மால் தான் மக்களுக்கு பணியாற்ற முடியும் என்றார்கள். ஆனால் இரண்டு வருடங்கள் கடந்தும் ஒரு செங்கற்கல் கூட கண்டி மாவட்ட அபிவிருத்திக்காக வைக்கப்பட வில்லை.

கடந்த ஆட்சி காலத்தில் வீடமைப்பிற்கான காணி வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு இணைந்ததாக தனி வீட்டு திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. அவற்றில் பல வீட்டு திட்டங்கள் எமது காலப்பகுதியில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

எனினும் 2018 ஆம் ஆண்டு இறுதி காலம் முதல், 2019 ஆம் ஆண்டின் இறுதி காலம் வரை ஆரம்பிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் உள்ளன. அவை எமது அரசாங்கம் முடிவுக்கு வருகின்ற போது அரைவாசி கட்டப்பட்ட வீடுகளாக இருந்தது. ஆனால் இன்று இரண்டு வருடங்கள் கடந்தும் அவை அதே நிலையிலேயே உள்ளது. அவற்றின் அபிவிருத்திக்காக ஒரு சதமேனும் நிதி ஒதுக்கப்படவில்லை.

ஹேவாஹெட தொகுதியின், லூல்கந்துர தோட்டத்தின், தோட்ட வீடமைப்பு அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வீடுகள் அரைகுறையாக கைவிடப்பட்டுள்ளது. ஊராகளை மற்றும் ஹந்தானை தோட்டத்தில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யாது அரைகுறை நிலையில் உள்ளது.

இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ், ஹந்தானை தோட்டப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளுக்கும் அதே நிலைமையே காணமுடிகின்றது. தோட்ட பகுதிகளின் நாம் கொண்டு சென்ற வீடமைப்பு திட்டங்கள் முற்றாக இந்த ஆட்சியில் ஸ்தம்பிதம் அடைந்திருக்கிறது.

தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இவை கண்ணுக்கு தெரியாதுள்ளது. இத்தகைய திட்டங்களை பூர்த்தி செய்து மக்களுக்கு வழங்குவதை விட்டு, வேறு ஏமாற்று வேலைகளை செய்து வருகின்றனர். தமது நண்பர்களை, தமக்குதவிய வியாபாரிகளை, சந்தோஷப்படுத்தும் வேலையை செய்து வருகின்றனர். தோட்ட மக்களை ஏமாற்றி, காணி தருகின்றோம், என கூறிக்கொண்டு, தமது சகாக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க மாவட்டம் முழுவதும் அலைந்து திரிகின்றனர்.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு நாம் ஆரம்பித்து வைத்த திட்டங்களை முன்னெடுக்க இயலுமை இல்லையா? அல்லது இயலுமை இல்லாத பிரதிநிதிகளை கண்டி மாவட்டத்தில் வைத்திருப்பதால் இந்நிலைமையா? அல்லது ராஜாங்க அமைச்சரே இதைப்பற்றி தெரியாமல் இருக்கின்றாரா? என்ற கேள்வியையே மக்கள் சார்பாக நாம் முன்வைக்க வேண்டி இருக்கின்றது.” என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பங்களாதேஷில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Next Post

புதுச்சேரிக்கு விஜயம் செய்யும் மோடி; தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பு!

Related Posts

மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026!
இலங்கை

2026-05-08
கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த அஞ்சல் வாகன சேவை இன்று ஆரம்பம்!

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!
இலங்கை

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

2026-05-08
Next Post
புதுச்சேரிக்கு விஜயம் செய்யும் மோடி; தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பு!

புதுச்சேரிக்கு விஜயம் செய்யும் மோடி; தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பு!

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

கம்பஹாவின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,654பேர் பாதிப்பு- 23பேர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026!

மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026!

0
கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!

கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!

0
பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

0
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த அஞ்சல் வாகன சேவை இன்று ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த அஞ்சல் வாகன சேவை இன்று ஆரம்பம்!

0
பெரும்பான்மையை நிரூபிப்பவர் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவார்: தமிழக ராஜ்பவன் தகவல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.