தலிபான்கள் தொடர்புடைய வட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
தலிபான்கள் நிர்வாக தொடர்புக்காக வட்ஸ் அப்பை பயன்படுத்தியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து, தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக நேற்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது.
அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தலிபான்கள் தொடர்புடைய வட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.


















