இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 35 ஆயிரத்து 201 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 22 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 14 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
அதேநேரம் 3 இலட்சத்து 74 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 440 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 32 ஆயிரத்தைக் கடந்துள்ளது.