நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர், இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கள உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பூசியேற்றும் நடவடிக்கை தொடர்பாக பரவும் பொய்யான விடயங்கள் காரணமாக தடுப்பூசியை நிராகரிப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரை தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகளவானோர் யாழ். மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.















