மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்களப் பணியாளர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது.
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பைசர் தடுப்பூசின் பூஸ்டர் ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கே.கலாரஞ்சனி அவர்களின் மேற்பாவையில் இந்த தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
முதல்தர பணியாளர்களாக கடமையாற்றும் வைதியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட ஊழியங்களுக்கும் இதன்போது முதல்கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு தடுப்பூசி களை பெற்றுக்கொண்டு 6 மாதங்கள் பூர்த்தியாகிய உத்தியோகத்தர்களுக்கே இதன்போது பைசர் தடுப்பூசி போடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் ஏற்றும் ஆரம்ப நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கே.கலாரஞ்சனி, பிரதான தாதிய உத்தியோகத்தர் நா.சசிகரன் உள்ளிட்ட வைத்தியசாலையில் உயரதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.














