தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் புதிய வீடொன்றை வாங்கியுள்ளதாகவும், அங்கு அவர் குடிப்பெயர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி அவர் சென்னை போயஸ் கார்டனில் வீடொன்றை வாங்கியுள்ளதாகவும், விரைவில் அங்கு குடிப்பெயரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மற்றும் நடிகர்களான ரஜினிகாந்த், தனுஷ் இயக்குனர் பாலா உள்ளிட்ட பலர் வீடுகளை கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















