• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி!

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி!

Anoj by Anoj
2021/12/30
in கிரிக்கெட், விளையாட்டு
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 113 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில், இந்தியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

சென்சூரியனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 327 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 123 ஓட்டங்களையும் மாயங் அகர்வால் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லுங்கி ங்கிடி 6 விக்கெட்டுகளையும் ரபாடா 3 விக்கெட்டுகளையும் மார்கோ ஜென்ஸன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 197 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெம்பா பவுமா 52 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 5 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 130 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 174 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கு 305 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 34 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரபாடா மற்றும் மார்கோ ஜென்ஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 305 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 191 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 113 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டீன் எல்கர் 77 ஓட்டங்களையும் டெம்பா பவுமா ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பும்ரா மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மொஹமட் சிராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே.எல். ராகுல் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி ஜோகனஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.

Related

Tags: இந்தியக் கிரிக்கெட் அணிகே.எல். ராகுல்டெஸ்ட் போட்டிதென்னாபிரிக்க கிரிக்கெட் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசுக்கு துணைபோகாமல், நீதியை நிலைநாட்டுங்கள்! சர்வதேசத்திடம் காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை!

Next Post

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் மூன்று வாரங்கள் ஆகுமாம்!

Related Posts

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!
உதைப்பந்தாட்டம்

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

2026-06-19
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!
ஆசிரியர் தெரிவு

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!

2026-06-19
2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!
கிரிக்கெட்

2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!

2026-06-19
உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!
உதைப்பந்தாட்டம்

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

2026-06-18
இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!
உதைப்பந்தாட்டம்

இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

2026-06-18
ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!
உதைப்பந்தாட்டம்

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

2026-06-18
Next Post
நிபந்தனைகளுடன் இன்று முதல் எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி!

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் மூன்று வாரங்கள் ஆகுமாம்!

சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதியானது!

சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதியானது!

பிரதமரின் தலைமையில் பௌத்த தகவல் அமைப்பு மக்கள் மயப்படுத்தப்பட்டது!

பிரதமரின் தலைமையில் பௌத்த தகவல் அமைப்பு மக்கள் மயப்படுத்தப்பட்டது!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

0
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

0
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

பதுளையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

0
செம்மணி மனித புதைகுழி போராட்டக்காரர்களை புறக்கணித்த அமைச்சர்!

செம்மணி மனித புதைகுழி போராட்டக்காரர்களை புறக்கணித்த அமைச்சர்!

0
படகு ஓடுபாதையை ஆழப்படுத்துமாறு கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் ரவிகரன் எம்.பியிடம்கோரிக்கை!

2026-06-20

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.