இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் மேலும் 10 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்கிழமை) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 65 ஆக அதிகரித்துள்ளது.













