• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
விபத்துக்குள்ளான சீன விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன? மீட்பு பணிகள் தீவிரம்!

Anoj by Anoj
2022/03/21
in உலகம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்மேற்கு சீனாவில் 133 பேரை ஏற்றிச் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குச் சென்ற சைனா ஈஸ்டர்ன் விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.11 மணிக்கு புறப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன.

விபத்தில் சிக்கிய ஜெட் விமானம் போயிங் 737 விமானம் என்றும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உடனடியாக தெரியவில்லை என்றும் மாகாண அவசர மேலாண்மை பணியகத்தை மேற்கோள் காட்டி மாநில ஒளிபரப்பு தொலைக்காட்சி நிறுவனமான சிசிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

போயிங் 737 விமானம் குவாங்சி பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள கிராமப்புற மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானம், தெற்கு சீனாவில் உள்ள மலைப்பகுதியில் குன்மிங் நகரிலிருந்து குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது என்று சீனாவின் சிவில் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் ஒஃப் சீனா (சிஏஏசி) தெரிவித்துள்ளது.

வுஜோ நகரின் மீது பறந்துக்கொண்டிருந்த போது, விமானம் தொடர்பை இழந்ததாகவும், விமானத்தில் 123 பயணிகளும் ஒன்பது பணியாளர்களும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முன்னதாக விமானத்தில் 133 பேர் இருந்ததாக அரச ஊடகம் தெரிவித்தது.

மேலும், இந்த விமானம், இறுதியாக, 376 நாட்ஸ் வேகத்தில் 3225 அடி உயரத்தில் மதியம் 2:22 மணிக்கு பறந்ததாக, விமான கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானம், மாலை 3:05 மணிக்கு தரையிறங்க இருந்தது.

6 வருட பழமையான 737-800 விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லை.

சீனாவின் மூன்று முக்கிய விமான நிறுவனங்களில் சைனா ஈஸ்டர்ன் நிறுவனமும் ஒன்றாகும்.

கடந்த தசாப்தத்தில் நாட்டின் விமானத் துறையின் பாதுகாப்புப் பதிவு உலகின் மிகச் சிறந்ததாக உள்ளது.

இரட்டை எஞ்சின், ஒற்றை இடைகழி போயிங் 737 குறுகிய மற்றும் நடுத்தர தூர விமானங்களுக்கான உலகின் மிகவும் பிரபலமான விமானங்களில் ஒன்றாகும்.

ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க்கின் கூற்றுப்படி, சீனாவின் கடைசி அபாயகரமான ஜெட் விபத்து 2010ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.

ஹெனான் எயார்லைன்ஸின் எம்ப்ரேயர் இ-190 பிராந்திய ஜெட் விமானம், யிச்சுன் விமான நிலையத்தை நெருங்கும்போது விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 96 பேரில் 44பேர் உயிரிழந்தனர்.

Related

Tags: சைனா ஈஸ்டர்ன்தென்மேற்கு சீனாபோயிங் 737 விமானம்ஜெட் விமானம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைனிலுள்ள இரசாயன ஆலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: அம்மோனியா கசிவினால் மக்கள் அச்சம்!

Next Post

டொலர் தட்டுப்பாடு – வெளிநாட்டில் உள்ள மூன்று தூதரகங்கள் மூடல் !!

Related Posts

பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!
இங்கிலாந்து

2026-03-12
உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபர் – சீனாவின் புதிய கண்டுபிடிப்பு
உலகம்

வளைகுடா, ஹார்முஸ் நீரிணையில் இதுவரை ஆறு கப்பல்கள் மீது தாக்குதல்!
ஈரான்

மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!
அமொிக்கா

ஹிஸ்புல்லா தாக்குதல் – ஜனாதிபதி மக்ரோன் கடும் எச்சரிக்கை

ஸ்காட்லாந்து ஆசிரியர் வேலைநிறுத்தம் – உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும்!
இங்கிலாந்து

ஸ்காட்லாந்து ஆசிரியர் வேலைநிறுத்தம் – உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும்!

2026-03-12
Next Post
புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு – ஜனாதிபதி : தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை – அரசாங்கம்

டொலர் தட்டுப்பாடு - வெளிநாட்டில் உள்ள மூன்று தூதரகங்கள் மூடல் !!

என்ன செய்வது என்று தெரியாமல் அரசியல் தலைமைகள் தடுமாறுகின்றன- நஸீர்

மலையக கல்வி வளர்ச்சிக்கு வறுமைதான் முக்கிய தடை- ஜீவன்

சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் !

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

0
பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!

பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!

0
ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !

சுற்றுச்சூழலை காப்போம் – பிளாஸ்டிக் முகாமைத்துவத்திற்கான புதிய திட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.