மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகேயுள்ள மாநகர பேருந்து நிறுத்த நிழற்குடையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது.
அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த விளம்பரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பா.ஜ.க.வினர் சிலர் ஒட்டியிருக்கின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சில அமைப்பினர் கருப்பு வர்ணத்தை கொண்டு மோடி படத்தை அழித்துள்ளனர். இந்த செயலை செய்ததற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
மோடியின் படத்தின் மீது கருப்பு மை பூசியதற்காக 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது.



















