• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
மாணவர் ஒருவர் மதிய உணவிற்கு தேங்காய்த் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை – ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

மாணவர் ஒருவர் மதிய உணவிற்கு தேங்காய்த் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை – ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/22
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்துவந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த செய்தி தொடர்பில் தகவல்களைப் பெற ஜனாதிபதி அலுவலகம் நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, மினுவாங்கொடை பிராந்திய பணிப்பாளர் வஜிர ரணராஜா, கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யூ. சத்தியானந்த, திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர், மினுவாங்கொடை கல்வி வலய திவுலப்பிட்டி கல்விப் பிரிவின் பணிப்பாளர், கொங்கொடமுல்ல புனித அந்தோனியார் கனிஷ்ட கல்லூரியின் அதிபர் ஆகியோரிடமிருந்து தகவல்கள் பெற்றப்பட்டன.

அத்துடன், மாணவி வாழும் பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் இருந்தும் தகவல்கள் பெறப்பட்டன.

எனினும், இந்தத் தகவல்களின்படி அவ்வாறானதொரு சம்பவம் எதுவும் அப்பகுதியில் பதிவாகவில்லை என்று உறுதியாகியுள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நிலைமைக் காரணமாக உணவு நெருக்கடி ஏற்பட்டால் இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எந்தவொரு குழந்தையோ, நபரோ அல்லது குடும்பமோ உணவு நெருக்கடிக்கு உள்ளானால் இதற்குத் தீர்வு காண விசேட வேலைத்திட்டமொன்று பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் மட்டத்தில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 0114354647 மற்றும் 0114354354 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து 5705/5707 ஆகிய நீட்டிப்பு இலக்கங்களின் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் உதவி பெறத் தகுதியான அளவுகோல்களைக் கொண்ட தரப்பினராக 05க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சமுர்த்தி பயனாளிகளது குடும்பங்கள், ஊனமுற்றோர் மற்றும் நாட்பட்ட நோயாளர்களைக் கொண்ட குடும்பங்கள், 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஏழ்மையான குடும்பங்கள், கணவன் அல்லது மனைவி இல்லாத குடும்பங்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களைக் கொண்ட குடும்பங்கள், ஆரம்பக் கல்வி கூட பெறாத ஏழைக் குடும்பங்கள், கடுமையான உணவுப் பற்றாக்குறையுள்ள குடும்பங்கள் மற்றும் கடுமையான உணவுப் பஞ்சத்தில் இருக்கும் குடும்பங்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறான குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் மாதாந்தம் 15,000 ரூபாவை கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக வழங்க முடியும். அதற்கமைய முதல் 03 மாதங்களுக்கு பணம் வழங்கப்படுவதுடன் மேலும் 06 மாதங்களுக்கு உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதுதவிர மாதந்தோறும் 10,000 ரூபா வீதம் 6 மாதங்கள் வரை கொடுப்பனவு வழங்க அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் உள்ளடங்காத மற்றும் தற்சமயம் உணவு கிடைக்காமல் தவிக்கும் குடும்பங்கள் இருப்பின் அவர்களுக்கு குறுகிய காலத்தில் உணவு வழங்க வாய்ப்பு உள்ளது. கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக ஜனாதிபதி செயலகத்தின் உணவு பாதுகாப்பு திட்டப் பிரிவுக்கு கோரிக்கை முன்வைக்க வேண்டும்.

மேலும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்களைக் கொண்ட குடும்பங்கள் இருந்தால், அது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, அத்தகைய குடும்பங்களுக்கு அரசாங்கம் செயல்படுத்தி வரும் பெற்றோர் பாதுகாவலர் திட்டங்கள் மூலம் உணவு உதவித் திட்டங்கள் வழங்கப்படும்.

மேலும், உணவின்றி தவிக்கும் குடும்பங்கள் பற்றிய தகவல்களை பாடசாலை ஆசிரியர்களும் சேகரித்து, ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்ப முடியும். அத்தகைய குடும்பங்களுக்கு உதவ விரும்புபவர்களும் இதில் இணைந்து உதவி வழங்க முடியும்.

அதுமட்டுமின்றி கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இந்த வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்ய முடியும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related

Tags: தேங்காய்த் துண்டு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மத்தள விமான நிலையத்திற்கு மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டம் – நிமல் சிறிபால டி சில்வா

Next Post

மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது மின்வெட்டு நேரம்!

Related Posts

இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!
இலங்கை

இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

2026-03-18
2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!
இலங்கை

2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

2026-03-18
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?
இலங்கை

பொதுத்துறை நிறுவனங்கள், பாடசாலைகள், நீதிமன்றங்களுக்கு இன்று சிறப்பு விடுமுறை!

2026-03-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-18
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!
இலங்கை

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து
இலங்கை

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
Next Post
எதிர்வரும் சில நாட்களுக்கு மக்கள் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும் என்கிறது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது மின்வெட்டு நேரம்!

கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் இன்று

கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் இன்று

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஆதரவு வழங்கத் தயார் – வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஆதரவு வழங்கத் தயார் - வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

0
2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

0
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?

பொதுத்துறை நிறுவனங்கள், பாடசாலைகள், நீதிமன்றங்களுக்கு இன்று சிறப்பு விடுமுறை!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.