ஹிக்கடுவ, திராணகம சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இருவரையும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
















