20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியங்கள் மிக வேகமாக வளர்ந்துள்ளதாக, அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
சலுகையைத் தவிர்த்து வழக்கமான ஊதியம், செப்டம்பர் மற்றும் நவம்பர் இடையே ஆண்டு வேகத்தில் 6.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து தொற்றுநோயைத் தவிர்த்து இது மிக விரைவான வளர்ச்சியைக் குறிக்கிறது.
இருப்பினும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சரிசெய்யப்பட்டபோது, ஊதியம் 2.6 சதவீதம் குறைந்துள்ளது.
உக்ரைனில் நடந்த போரின் காரணமாக, வாழ்க்கைச் செலவு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.
















