• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விக்கிரமசிங்க-சம்பந்தன் உடன்படிக்கை வேண்டும் – சாணக்கியன்

திறைசேரியின் செயலாளர் சிறை செல்ல நேரிடும் – நாடாளுமன்றில் எச்சரித்தார் சாணக்கியன்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/03/08
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
63
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டின் பொருளாதார நிலைமை,பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் உரையாற்றினார்.

2500 ரூபாவினால் ஒரு குடும்பம் தமது ஒருமாத செலவுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார். ஆகவே இவரின் பொருளாதார மதிப்பீட்டை  நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம்,நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என ஆளும் தரப்பினர் நாடாளுமன்றத்தில் பெருமையாக குறிப்பிட்டாலும் நடைமுறையில் நிலைமை தலைகீழாக உள்ளது. வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவதற்கு முன்னர் தேவையான மருந்துகளை மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிடப்படுகிறது.

தமது பிள்ளைகளின் மருத்துவ மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ஒரு தாய் தனது இரு பிள்ளைகளை கிணற்றில் தள்ளி தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் நாட்டில் பதிவாகியுள்ளது.

ஆகவே பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்துக்கும், நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது என குறிப்பிடும் அரசாங்கம், கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 01ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 158 பில்லியன் ரூபாவை தேசிய மட்டத்தில் கடனாக பெற்றுக்கொண்டுள்ளது. வரவுசெலவுத் திட்டத்தின் வரி அதிகரிப்பு  கொள்கை ஊடாக கடனை மீள் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார கொள்கையினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எரிபொருள் விலையேற்றத்தினால் 4 இலட்சம் முச்சக்கர வண்டி சாரதிகள் வாழ்வாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. உள்ளுராட்சிமன்றத் தேர்தல்  இடம்பெறுமா அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமைய பிற்போடப்படுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு அரசாங்கம் தடையேற்படுத்தியுள்ளதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி விடுவிப்பதை தடுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கு எதிராக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தின்  உத்தரவுக்கு அமைய  திறைச்சேரியின் செயலாளர் செயற்பட வேண்டும், இல்லாவிடின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு அமைய சிறை செல்ல நேரிடும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிச்சையாக முன்னேற்றமடையும் திறன் கொண்டவர்கள்.

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயம்,கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடி கைத்தொழில் ஆகிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எனக் கூறுவதற்கும் அருவருப்பாக இருக்கின்றது. இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையில் மோதலை உருவாக்குவதுதான் அவருடைய பொறுப்பாக காணப்படுகின்றது. அவர் இந்த அரசாங்கத்தின் கைகூலியாக இருக்கின்றார்.

அவர் வட பகுதியிலுள்ள மீனவர்கள் குறித்து சிந்தித்து பார்க்காமல் அவர் என்ன செய்கின்றார். இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டினையே அவர் முன்னெடுக்கின்றார்.

இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ள தமிழக அரசியல்வாதிகளையும், தமிழக மக்களையும் எங்களுக்கு எதிரானவர்களாக மாற்றும் நோக்கிலேயே அவர் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் இனிவரும் காலங்களில் இவ்வாறானவர்களை இனங்கண்டு விரட்டியடிக்க வேண்டும்.

எங்களுடைய பொருளாதாரத்தை முழுமையாக அழித்த இந்த அரசாங்கம். விவசாயிகளுக்கு 100 ரூபாய்க்கு நெல்லை கொள்வனவு செய்வதாக சொன்ன ஜனாதிபதி, இன்று அறுவடை முடிந்தும் 35 ரூபாய்க்கும் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை.

கிழக்கு மாகாண ஆளுநரின் மிக மோசமான செயற்பாடுகள் காரணமாக,  மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினுடைய காணிகளில் குறிப்பாக மயிலத்தமடு, மாதவனை போன்ற பகுதிகளில் தமிழ் மக்களின் கால்நடைகள் சுடப்படுகின்றன.

பொலிஸார் வேடிக்கை பார்க்கின்றனர். பொலிஸ் ஆணைக்குழுவில் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: இரா.சாணக்கியன்திறைசேரி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நிறைவுக்கு கொண்டுவாருங்கள் – இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்து

Next Post

பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும்- செந்தில் தொண்டமான்

Related Posts

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!
இலங்கை

2026-06-16
சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!
இலங்கை

சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக கூறப்படும் சம்பவத்தில் மனித உரிமை ஆணைக்குழு தீவிர விசாரணை!

2026-06-16
பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!
இலங்கை

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

2026-06-16
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

2026-06-16
Next Post
பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும்- செந்தில் தொண்டமான்

பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும்- செந்தில் தொண்டமான்

பொதுஜன பெரமுனவவின் பொதுச் செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்புரை!

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – மொட்டு கட்சி!

அடுத்த இரண்டு வாரங்களில் 2.9 பில்லியன் டொலர் கடன் கிடைக்கும் – நிதி அமைச்சு

அடுத்த இரண்டு வாரங்களில் 2.9 பில்லியன் டொலர் கடன் கிடைக்கும் - நிதி அமைச்சு

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

0
சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

0
வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!

சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக கூறப்படும் சம்பவத்தில் மனித உரிமை ஆணைக்குழு தீவிர விசாரணை!

0
பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

0
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

0
கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

2026-06-16
சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

2026-06-16
வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!

சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக கூறப்படும் சம்பவத்தில் மனித உரிமை ஆணைக்குழு தீவிர விசாரணை!

2026-06-16
பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

2026-06-16
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

2026-06-16

Recent News

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

2026-06-16
சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

2026-06-16
வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!

சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக கூறப்படும் சம்பவத்தில் மனித உரிமை ஆணைக்குழு தீவிர விசாரணை!

2026-06-16
பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.