நேற்றை தினம் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடிய அவரது ரசிகர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், யாக்களவாரி பாளையம் கிராமத்தில் உள்ள அவரது ரசிகர்கள் சிலர் சூர்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக கட்டவுட் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது 19 ,20 வயதான வெங்கடேஷ் மற்றும் சாய் ஆகிய இரு ரசிகர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

















