வவுனியா, நொச்சிமோட்டையில் நேற்று இரவு முகமூடி அணிந்த சிலர் வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதிகளான 58 வயதான மாரிமுத்து செல்வநாயகம் மற்றும் அவரது மனைவி செ. செல்வராணி மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன் அவ்வீட்டில் திருடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதன்போது சுதாகரித்துக் கொண்ட வீட்டு உரிமையாளர் திடீரென வாளை திருடர்களிடம் இருந்து பறித்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் காயமடைந்த திருடர்கள் அங்கிருந்த தொலைபேசி ஒன்றை மாத்திரம் எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.















