மரநடுகை மாதமாக நவம்பர் மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வட மாகாண சபையின் விவசாயத் திணைக்களத்தின் மூலம் மரநடுகை திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வட ஆளுநரிடமும் வடக்கு மாகாண பிரதம செயலாளரிடமும் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன ஆகியோருக்கு நேற்றைய தினம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே சி.வீ.கே.சிவஞானம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

















