அஸ்வெசும இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
முதல் கட்ட கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைய உள்ள நிலையில் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது,
அஸ்வெசும பயனாளிகள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் செப்டம்பர் மாதக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், நவம்பர் மாத இறுதியில் ஒக்டோபர் மாதப் பணம் செலுத்தப்படும என்றும் குறித்த சபை தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனம் செலுத்தி ‘அஸ்வெசும’ சிறப்பு வாரம் நாளை முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.














