உக்ரைன் மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதிகளுக்கு இடையே சந்திப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகHaaretz இஸ்ரேலிய செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் உதவியுடன் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கபடுகின்றது.
ஈரான் மற்றும் ரஷ்யா ஆதரவாளர்களுக்கு எதிராக சிறந்த இராணுவ படைகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பு இடம்பெற்றால் ரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பித்ததன் பின்னர், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இஸ்ரேலுக்கு பயணிப்பது இதுவே முதல் சந்தர்ப்பம் என்றும் Haaretz செய்தித்தாள் தெரிவித்துள்ளது.