யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு மாகாண ஆளுநரால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது
குறித்த நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் குறித்த நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இதன் போது வேலணை வலிகாமம் மேற்கு நெடுந்தீவு வடமராட்சி தெற்கு மற்றும் மேற்கு ஆகிய பிரதேச சபைகளுக்கும் பருத்தித்துறை நகர சபைக்குமான உத்தியோகப்பூர்வ இணையத்தளங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருந்தது.
மேலும் பொதுமக்கள் தங்களுக்கான சேவைகளை இணையத்தினூடாக பெற்றுக்கொள்வதற்கு தேவையான வசதிகளையும் வரி உள்ளிட்ட கட்டணங்களையும் இணையதளத்தினூடாக செலுத்துவதற்கான வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறித்தியிருந்தார்.













