வடக்கில் இராணுவம், வனவள திணைக்களம், வனஜீவராசி, கடற்படை ஆகியவற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பொதுமக்களால் ஜனாதிபதிக்கு இன்று தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.
“நிலத்தை இழந்த மக்களின் குரல்” எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் 100க்கு மேற்பட்ட காணி உரிமையாளர்கள் கலந்துகொண்டு ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
















