முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில், விசுவமடு பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணியில் 3 யானைகள் உட்புகுந்து அறுவடை செய்யும் தருவாயில் இருந்த தர்ப்பூசணி பழங்கள் மற்றும் 100 இற்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதமாக்கியுள்ளன.
இக்கிராமத்தில் நீண்டகாலமாக யானைகள் தமது வாழ்வாதாரங்களை அழித்து வருவதாகவும் அங்குள்ள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
யானை வேலிகள் போடப்படும் வேலைகள் பூர்த்தியாகாத நிலையில் உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து தமது பிரச்சனைக்கு தீர்வை பெற்று தருமாறு விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.














