• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
கிளிநொச்சியில் இடம்பெற்ற பாாிய சமுர்த்தி மோசடி – ஆராயும் ஆதவனின் திசைகள்…..!

கிளிநொச்சியில் இடம்பெற்ற பாாிய சமுர்த்தி மோசடி – ஆராயும் ஆதவனின் திசைகள்…..!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/07/30
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்
72 0
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் பல இலட்சம் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் கணக்காய்விற்காக 4 விசேட குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாகவே ஆதவனின் திசைகள் இன்று அவதானம் செலுத்தியுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை சமுர்த்தி வங்கிக் கிளையில் கடந்த வெள்ளிக்கிழமை எழுமாறான முறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போதே குறித்த வங்கி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் பல இலட்சம் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த சமுர்த்திக் கிளையின் அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டு பிரதேச செயலாளரினால் வங்கிக் கிளை பொறுப்பெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு பிரிவு, சமுர்த்தி திணைக்களத்தின் மாவட்ட கணக்காய்வுப் பிரிவு, கண்டாவளை பிரதேச செயலக உள்ளக கணக்காய்வுப் பிரிவு, மாவட்டச் செயலக புலனாய்வு உத்தியோகத்தர்கள் என நான்கு குழுக்கள் நேற்றைய தினம் கணக்காய்வினை ஆரம்பித்துள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வங்கிக் கிளையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டதைத்தொடர்ந்து மேலும் ஆராய்ந்த பொழுது இன்னும்; பல முறைகேடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தா கரன் தெரிவித்துள்ளார்.

கணக்காய்வு தொடர்பான விசாரணைகள் முடிவதற்கு மேலும் சில நாட்கள் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வங்கிக் கிளை உத்தியோகத்தர்கள் சிலரும், 3 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் முறைகேட்டுடன் தொடர்புபட்டவர்களாக அடையாளம் காணப்பட்டதாகவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயனாளிகளின் கையொப்பமின்றி வங்கி கணக்கிலிருந்து பணம் மீளப்பெற்றுக்கொண்டமை, கையொப்பங்கள், கைநாட்டுக்களை முறைகேடாக பயன்படுத்தி நிதி மோசடி செய்தமை, பயனாளிகளின் அனுமதி மற்றும் சம்மதமின்றி வங்கிக் கடன்களை பெற்றுள்ளமை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளும் மோசடிகளும் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில் சுமார் 2 மில்லியன்களுக்கு மேல் முறைகேடு இடம்பெற்றுள்ளமையை உறுதி செய்யக்கூடியதாக உள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் சில உத்தியோகத்தர்கள் விசாரணைகள் முடியும்வரை பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரைணைகள் இடம்பெற்று வரும் நிலையில், பயனாளிகளை சில உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயம் தொடர்பாக யாரேனும் அச்சுறுத்த முற்பட்டாலோ அல்லது வேறு ஏதும் வழிகளில் அச்சுறுத்த முனைந்தாலோ தமக்கு தெரிவிக்குமாறு கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தா கரன் தெரிவித்துள்ளார்.

மேலும், வங்கி கொடுக்கல்வாங்கல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக சந்தேகங்கள் அல்லது சாட்சியங்கள் இருப்பின் தனக்கு முறைப்பாடு செய்யமாறும் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.

குறித்த முறைகேடுகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், தற்பொழுது கணக்காய்வுகள் இடம்பெற்று வருவதாகவும், அதன் அறிக்கை தனக்கு கிடைக்கவில்லை எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் தெரிவிக்கின்றார்.

இந்த மோசடி மற்றம் முறைகேடு தொடர்பாக அறிக்கை கிடைத்த பின்னர் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுவதுடன, முறைப்பாடுகள் இருப்பின் பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட செயலகத்துக்கு எழுத்து மூலமாக தெரிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரியத் தீர்வுக் கிடைக்கும் வரைக்கும், சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படும் வரைக்கும் ஆதவனின் திசைகள் அவதானத்துடன் இருக்கும்….

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குமார் சங்கக்காரவிற்கு இங்கிலாந்து கிரிக்கட் அணியால் புதிய பதவி!

Next Post

வவுனிக்குளத்தில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!
இலங்கை

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

2026-03-15
போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!
இலங்கை

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

2026-03-15
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்
இலங்கை

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

2026-03-15
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!
இலங்கை

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

2026-03-15
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!
இலங்கை

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

2026-03-15
Next Post
வவுனிக்குளத்தில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

வவுனிக்குளத்தில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

தேசபந்து தென்னகோனை தாக்கிய சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தேசபந்து தென்னகோனுக்கு ஆதரவாக தேரர் குழுவொன்று பேரணி!

இந்த ஆண்டோடு முட்டை இறக்குமதி நிறுத்தம்

முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

0
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.