• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
USAID நிதி நிறுத்தப்பட்டால் இலங்கை எதையெல்லாம் இழக்க நேரிடும்!

USAID நிதி நிறுத்தப்பட்டால் இலங்கை எதையெல்லாம் இழக்க நேரிடும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/11
in ஆசிரியர் தெரிவு, உலகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க அரசின் சார்பில் உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக 1960களின் முற்பகுதியில் அமெரிக்காவின் 35ஆவது ஜனாதிபதியான ஜோன் எப். கெனடியின் ஆட்சிக் காலத்தில் (John F. Kennedy) ஸ்தாபிக்கப்பட்ட ஸ்தாபனம் United States Agency for International Development ஆகும்

இந்த முகமையின் கீழ் 10,000 ஊழியர்கள் பணியாற்றிவரும்  நிலையில், இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாடுகளில் பணியாற்றிவருகின்றனர்.  60 நாடுகளில் பணிக்கான தளங்களை கொண்டுள்ள இந்த முகமை, இதற்கும் மேலாக பல்வேறுப்பட்ட நாடுகளில் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் பெரும்பாலான களப்பணிகளை மற்ற அமைப்புகளை பயன்படுத்தி ஒப்பந்த அடிப்படையிலோ, நிதி உதவி அளித்தோ USAID செய்து வருகிறது. இந்த அமைப்பு மேற்கொள்ளும் பணிகள் விரிவானவை. உதாரணத்திற்கு பட்டினியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உணவு அளிப்பதோடு, உலக அளவில் பஞ்சத்தை அளவிடும் அமைப்பையும் இயக்கி வருகிறது.
இந்த அமைப்பானது தரவுகளை ஆராய்ந்து எந்த நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக் கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் பணியைச் செய்கிறது.

USAIDன் நிதியில் கணிசமான அளவு சுகாதாரம் சார்ந்த பணிகளுக்காக செலவிடப்படுகிறது. போலியோ பாதிப்பு இன்னமும் தீர்க்கப்படாத நாடுகளில் தடுப்பூசி வழங்குவது மற்றும் பெருந்தொற்றுக்களை ஏற்படுத்தும் வைரஸ் பரவலை தடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

2024ம் ஆண்டு அறிக்கையின் படி, USAID அமைப்பானது 3.23 மில்லியன் டொலர்களை நிதியாக வழங்கியதன் மூலம் அந்த நிதியாண்டின் 2வது மிகப்பெரிய நன்கொடையாளராக மாறியிருந்தது.

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவால் வழங்கப்படுகின்ற நிதி தொடர்பான வெளிநாட்டு திட்டத்தை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்கும் வகையிலான ஆவணத்தில், கடந்த ஜனவரி 20ஆம் திகதி கையெழுத்திட்டார்.
இந்த உத்தரவுக்கு அமைய, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் USAID அமைப்பால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளன.சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் USAID ஆல் நடத்திச் செல்லப்படுகின்ற அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளிட்ட தளங்கள் செயலிழந்துள்ளன.

கடந்த 1961ஆம் ஆண்டு முதல் சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி, விவசாயம், வாழ்வாதார அபிவிருத்தி, சுற்றாடல், இயற்கை வளங்களின் முகாமைத்துவம், உள்ளூராட்சி மன்றங்கள், மனிதாபிமான உதவித் திட்டங்கள் போருக்குப் பின்னரான காலத்தில் நிலைமாற்று நியாயத்திற்கான துறைகள் உள்ளிட்ட விடயங்களில் அமெரிக்கா உதவி வழங்கும் திட்டங்களை நாட்டிற்குள் முன்னெடுத்திருந்தது.

இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்தத் திட்டங்களுக்காக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனமான USAID -இன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதியுதவிகளை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. இருந்தாலும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இதுவரையில் இந்த திட்டத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயல்திட்டங்கள் முழுமையாக இடை நிறுத்தப்படுமா அல்லது திட்டமிட்டபடி தொடருமா என்பதை இன்னுமே உறுதிசெய்யவில்லை. அத்துடன் வாசிங்டன் நகரிலுள்ள காரியாலயத்தில் இது தொடர்பாக நாங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், அவர்கள் அறிவித்த பிறகு இலங்கை தொடர்பான USAID -இன் நிலை தொடர்பில் முழுமையாக அறிவிப்போம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த தீர்மானத்திற்கு எதிராக தற்போது USAID -அமைப்பு நீதிமன்றத்தை நாடியிருந்தது. பின்னர் USAID என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் 2,200 பணியாளர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தை அமெரிக்க நீதிமன்றம் தற்காலிகமாக தடுத்துள்ளது.

இரண்டு தொழிற்சங்கங்கள் முன்வைத்த மனுவொன்றுக்கு அமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மிகவும் வரையறுக்கப்பட்ட வகையில் இந்த தற்காலிக தடையுத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதி கார்ல் நிக்கோல்ஸ் அறிவித்திருந்தார். அதேவேளை வோஷிங்டன் டி.சி.யில் உள்ள USAID இனது தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் வரி செலுத்துவோரின் மதிப்புமிக்க பணம் USAID  ஊடாக முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் நாம் பொறுத்திருந்து பார்ப்போம் இதனால் இலங்கை உட்பட உலகநாடுகளுக்கு ஏற்படப்போகும் மாற்றம் என்ன என்பதை…

Related

Tags: USAID
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாழ்க்கைய அழிக்ககூடிய எந்த கண்டுபிடிப்பையும் நான் செய்ய மாட்டேன் – எடிசன் ஒரு வெற்றி நாயகன்

Next Post

மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற AI உதவும் – மோடி உரை

Related Posts

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!
அமொிக்கா

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

2026-06-17
இந்திய அரசின் தடைக்கு எதிராக டெலிகிராம் வழக்கு!
இந்தியா

இந்திய அரசின் தடைக்கு எதிராக டெலிகிராம் வழக்கு!

2026-06-17
G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர்  –  அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!
அமொிக்கா

G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் – அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!

2026-06-17
கேலி சித்திரம் ஒன்றை பகிர்ந்தமை குறித்து ஜிம் அலிஸ்டர் மீது ‘இனவெறி’ குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

கேலி சித்திரம் ஒன்றை பகிர்ந்தமை குறித்து ஜிம் அலிஸ்டர் மீது ‘இனவெறி’ குற்றச்சாட்டு!

2026-06-17
பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !
இங்கிலாந்து

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !

2026-06-17
2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!
இலங்கை

2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

2026-06-17
Next Post
மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற AI உதவும் – மோடி உரை

மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற AI உதவும் – மோடி உரை

இந்தியா 3-வது பெரிய சூரிய சக்தி உற்பத்தி செய்யும் நாடாகும்

இந்தியா 3-வது பெரிய சூரிய சக்தி உற்பத்தி செய்யும் நாடாகும்

இந்திய ரூபாய் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

பொதுமக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

0
50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!

0
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

0
இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.