மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில், (Honduras) 18 சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த சிறிய ரக விமானமொன்று நேற்றைய தினம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இவ்விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியுள்ளனர் எனவும் ஒருவர் மாயமாகியுள்ளார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
















