கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த காணி ஒன்றிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் இரத்மலானை-மஹிந்தாராம வீதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி இரவு வீட்டை விட்டு வெளியேறி இருந்த நிலையில், வீடு திரும்பாத காரணத்தினால் இது குறித்து அவரது சகோதரர் கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.















