இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.
இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியாவும் – பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்பக்கொண்டுள்ளதாகவும் இரு நாடுகளும் சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் சூழ்நிலையை புரிந்து கொண்டு தாக்குதலை கைவிட்ட இரு நாடுகளுக்கும் எனது வாழ்த்துகள் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து விதமான தாக்குதல்களும் நேற்று மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இந்த நிலையில், உடன்பாட்டை மீறி ஜம்மு & காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்துவதாகவும், இந்திய வான் பாதுகாப்பு படைகள் அவற்றை முறியடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளதன.

















