இந்தியா – பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை கணிசமாக அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவருக்கு சொந்தமான சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அசைக்க முடியாத தலைமைப்பற்றி தான் மிகவும் பெருமைகொள்வதாகவும் இது பலரின் மரணத்திற்கும் அழிவுக்கும் வழிவகுத்திருக்கக்கூடிய தற்போதைய ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டிய நேரம் இது எனவும் மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் இறந்திருக்கலாம் எனவும் உங்கள் துணிச்சலான செயல்களால் உங்கள் மரபு பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுக்க அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன் எனவும் இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிப்பேன் எனவும் அவர் மேலும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.