ஐக்கிய மக்கள் சக்தியின் காலி தொகுதி அமைப்பாளர் பந்துலால் பண்டாரிகொட தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான கட்சியின் மாற்றப்பட்ட அளவுகோல்களில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து கட்சித் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டு, சரியான பதில் கிடைக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அனகிபுர அசோக சேபாலவும், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட சிறு கட்சிகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆரம்பத்திலிருந்தே தாய்க் கட்சியில் இருந்தவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தலைமையகம் நிறைவேற்றாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அசோக சேபால தெரிவித்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை உடனடியாக கட்சித் தலைவர், சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு உத்தியோகபூர்பூர்வமாக தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்ததற்கான காரணத்தை விளக்குவதற்காக இன்று (25) காலை தலவாக்கலையில் உள்ள தனது அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பொன்ரை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.














