பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றிருந்த நிலையில், அங்கு விமானத்தில் இருந்து இறங்கும் வேளை அவரது மனைவி மக்ரோன் மீது அறைவது போன்றும் அதனை அவர் சமாளித்துக் கொண்டு விமானத்தில் இருந்து கீழே இறங்குவது போன்றதுமான காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளானது.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இமேனுவல் மெக்ரோன்” தானும் தனது மனைவியும் நகைச்சுவை செய்து விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் அது இவ்வளவு பெரிய விஷடமாகும் எனத் தான் நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
47 வயதான பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் 72 வயதான தனது ஆசிரியரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் மெக்ரோனுக்கும் அரசியல் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



















