பங்களாதேஷில் திருமண மோசடிகள் மற்றும் மனிதக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், டாக்காவில் உள்ள சீன தூதரகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
அதில் சீன இளைஞர்கள் பங்களாதேஷ் உள்ளிட்ட வெளிநாட்டு பெண்களை மணக்கும் முயற்சிகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
தூதரக அறிக்கையின் படி, சமீப காலங்களில் சில சீன இளைஞர்கள் திருமணத்தின் பெயரில் பங்களாதேஷில் குற்றச்செயல்களுக்கு இலக்காகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சில தரகர்கள் மற்றும் அமைப்புகள் பங்களாதேஷ் பெண்களை சீன இளைஞர்களுடன் திருமணம் செய்து வைப்பதற்காக ஆன்லைன் விளம்பரங்கள், வீடியோக் கலந்துரையாடல்கள் மற்றும் பணம் தரும் உடன்பாடுகள் போன்ற முறைகேடான நடைமுறைகளை பின்பற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிலைக்கு சீனாவில் காணப்படும் மணப்பெண் தட்டுப்பாடும் ஒரு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சீனாவில் சுமார் 30 லட்சம் இளைஞர்களுக்கு மணப்பெண் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வங்கதேசத்தில் இருந்து மணப்பெண்களைக் கடத்தி சட்டவிரோதமாக திருமணம் செய்ய சீன மணமகன்கள் முன்வருவதாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



















