நைஜீரியா நாட்டின் மோக்வா, நகரில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக 111 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோக்வா நகருக்கு அருகில் உள்ள அணை உடைந்ததால் நகருக்குள் வெள்ளம் புகுந்து நிலைமையை மேலும் கவலைக்கிடமானது.
பல மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழைகாரணமாக மோக்வா நகரில், அப்பகுதி அணை உடைந்து நகருக்குள் நீர் புகுந்ததால் உயிரிழப்புக்கள் அதிகமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பல வீடுகள் நீரில் மூழ்கியதுடன் தரைவழி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும் கனமழை காரணமாக ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மேலும் அனர்த்தத்தில் பலர் காணமல் போயுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.














